Monday, February 9, 2009

உன்னை நினைத்ததும்
சில்லென்று குளிர் காற்று
முகத்தில் அடிக்கிறது
மூச்சிலிருந்து குளிர்வு
இதயம் வரை பாய்கிறது
பனிப்பாலம் உடைந்த மாதிரி
கொஞ்சம் வெடவெடத்து
குறுக்குறுப்பாய்
இன்னும்எழுத்திற்கு மசியா
உணர்வுகளும் இதற்காகவேணும்
எப்போதும் நினைக்கிறேன்
உன்னை.

சாகும் என் காதல் ....

உன் கடைசி வார்த்தைகளில் கழுத்தறுப்பட்ட என் கனவுகள்....

பீய்ச்சும் குருதியில் முங்கி.. மெல்ல சாகும் என் காதல்....

காத்திருப்பை மட்டுமே பரிசளித்த காலத்தை வைதபடிக்கு ... வீசுகிறேன் வெறுங்கையை ......

உதிர்ந்து சிதறும் கடைசி ஒற்றை ரோஜா ...

கணவனின் கை கோர்த்தபடிக்குநீ சிந்திய ஏளன புன்னகையின் விடத்தில் இன்னும் இன்னும் நீலம் பாரிக்கும் பிரபஞ்சம்....

இதயம் கிள்ளி கைத்தடியில் சொருகியபடிக்கு நீளும் என் பயணம்.....

Thursday, February 5, 2009

வித்யாவின் கவிதைகள்

தாயில்லா பிள்ளை
தாலாட்டில் தூங்கினான்
வகுப்பறையில்


பெற்ற தாயே பெருந்தெய்வம்
தலைவன் உருக்கம்
வீடு திரும்பி தாயை கொன்றான்
நாத்திகவாதி தொண்டன்

எனக்கு 20
உனக்கு 18
நமக்குள் வந்த அதற்கு
என்ன வயது!


இன்னும் வரும்........